
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர்-1 ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை நிர்ணயித்த 173 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 16 பந்தில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறப்பான ஆட்டத்தினால் அவருக்கு மிகுந்த மதிப்புமிக்க வீரர் விருது வழங்கப்பட்டது.
தற்போது ஜடேஜா அந்த விருதுடன் எடுத்த புகைப்படடத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'மிகுந்த மதிப்புமிக்க வீரர் என்று ஐபிஎல்-க்கு தெரிகிறது. ஆனால், சில ரசிகர்களுக்கு தான் தெரியவில்லை' என கிண்டலாக டுவிட் செய்துள்ளார்.
Upstox knows but..some fans don’t pic.twitter.com/6vKVBri8IH
— Ravindrasinh jadeja (@imjadeja) May 23, 2023