Advertisement
Advertisement
Advertisement

அதுதான் தோனி. அது அவரது இயல்பு - அம்பத்தி ராயுடு!

கோப்பையை பெற்றுக் கொள்ளும் போது அவருடன் நானும், ஜடேஜாவும் இருக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்ததாக அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 02, 2023 • 13:59 PM
Rayudu reveals reason behind Dhoni's king-sized 'IPL Trophy' gesture!
Rayudu reveals reason behind Dhoni's king-sized 'IPL Trophy' gesture! (Image Source: Google)
Advertisement

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 5ஆவது முறையாக பட்டம் வென்றது. வெற்றிக் கோப்பையை அணியின் கேப்டன் தோனி மட்டுமல்லது சீனியர் வீரர்களான ராயுடுவும், ஜடேஜாவும் உடன் சென்று பெற்றுக் கொண்டனர். 

இது குறித்து பேசிய ராயுடு, “இறுதிப் போட்டியில் வென்ற பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்த என்னையும், ஜடேஜாவையும் தோனி அழைத்து பேசினார். கோப்பையை பெற்றுக் கொள்ளும் போது அவருடன் நானும், ஜடேஜாவும் இருக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார். அதை செய்வதற்கு அதுதான் சரியான தருணம் என்றும் அவர் நினைத்துள்ளார். அது அவருக்கும் ரொம்பவே ஸ்பெஷலான தருணம். ஆனால், அவர் அப்படிச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. அதுதான் தோனி. அது அவரது இயல்பு” என ராயுடு தெரிவித்துள்ளார்.

Trending


சமீபத்தில் ராயுடு, அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். 37 வயதான ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியவர். கடைசியாக கடந்த 2019இல் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 203 போட்டிகளில் விளையாடி உள்ளார். 4,329 ரன்கள் குவித்துள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட் செய்துள்ளார். கடந்த 2018 முதல் சென்னை அணிக்காக விளையாடினார். சிஎஸ்கே அணிக்காக 89 ஐபிஎல் போட்டிகளில் 1,913 ரன்கள் குவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement