
Raza, Kaia's Century Helps Zimbabwe Beat Bangladesh In The First ODI By Five-Wickets (Image Source: Google)
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் தமிம் இக்பால் - லிட்டன் தாஸ் இணை ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.