
பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் பல்வேறு பரபரப்புகள் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. மேலும் சில சங்கடங்களும் நிறைந்ததாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. இது ஆரம்பத்திலேயே லக்னோ அணிக்கு மிகப்பெரிய அழுத்தமாக அமைந்தது. 213 ரன்கள் இலக்கை எட்டுவது மிகவும் கடினம் என்றாலும் மனம் தளராத லக்னோ அணி களமிறங்கியபோது, அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் பறிபோயின.
அதன் பிறகு உள்ளே வந்த ஸ்டாய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் தங்களது அதிவேக பேட்டிங்கில் ரன்குவித்து ஆட்டத்தை மொத்தமாக லக்னோ அணியின் பக்கம் திருப்பினர். கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டபோது, ஐந்து பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் மற்றும் நான்கு ரன்கள் மட்டுமே அடித்து சமன் செய்தது லக்னோ.
கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டபோது, பல்வேறு திறப்பு முனைகள் நடந்தன. பேட்டிங் செய்த ஆவேஸ் கான் பந்தை அடிக்க முடியவில்லை. கீப்பர் வசம் பந்து சென்றது. அதை தட்டுத்தடுமாறி பிடித்ததால், பந்தை தூக்கி எறிவதற்குமுன் ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் ஒரு ரன் ஓடிவிட்டனர். அந்த ரன்னை எடுத்து முடித்தவுடன் ஆவேஸ் கான் ஆக்ரோஷமாக ஹெல்மெட்டை தூக்கி கீழே எரிந்து கொண்டாடினார்.