
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்தத் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது . லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி இரண்டாம் இடத்தில் இருக்கிறது . இன்று நடைபெற்று வரும் போட்டியில் ஆர்சிபி அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. ஆர் சி பி அணி தனது முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது அதன் பிறகு நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்விகளை தழுவி வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறது . டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலுமே தோல்வி அடைந்து முதல் வெற்றியைக் காண ஆவலுடன் உள்ளது .
இரண்டு அணிகளுமே வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கும் பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது . ஆர் சி பி அணியை பொறுத்தவரை அந்த அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக இருந்தாலும் பந்துவீச்சில் எப்போதுமே சொதப்பி வரும் ஒரு அணியாகவே பார்க்கப்படுகிறது . தங்கள் அணியினர் எவ்வளவு அதிக ஸ்கோர் செய்தாலும் இறுதியில் இரண்டு ரன்கள் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அளவிற்கு பந்துவீச்சு கடந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறது .
தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்த பந்துவீச்சை கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் அடுத்தடுத்த இரண்டு தோல்விகள் அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு இழுத்துச் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது . இந்நிலையில் ஆர் சி பி அணியின் போட்டி திட்டங்கள் மற்றும் அணுகுமுறை குறித்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சராஜ் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .