
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கடந்த சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதனால் நடப்பு சீசனில் அந்த அணி தவறுகளை திருத்தி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில், நடப்பு சீசனில் விளையாடும் ஆர்சிபி அணியின் பலம், பவீனம், டாப் வீரர்கள் மற்றும் அணியின் அட்டவணையை இப்பதிவில் காண்போம்.
ஆர்சிபி அணியின் பலம் மற்றும் பலவீனம்
ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி நடப்பு சீசனில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக இருப்பதுடன் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஆடவர் அணிதான் விளையாடிய 16 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாம் இருந்து வரும் நிலையில், அந்த நிலையை மகளிர் அணி முறியடித்து புதிய சரித்திரம் படைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. அதற்கேற்றவாரே அந்த அணி நடப்பு சீசனில் வலிமையான பேட்டிங் மற்றும் பந்துவீச்சைக் கொண்டுள்ளதால் நிச்சயம் அந்த அணி பிற அணிகளுக்கு சவாலளிக்கும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.