
ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நடக்கவுள்ள 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் கூடுதலாக ஆடுவதாக இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரும், ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான டிவில்லியர்ஸ் ஐபிஎல்லிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட வல்லவர் என்பதால் மிஸ்டர் 360 என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டிவில்லியர்ஸ், 2019 உலக கோப்பைக்கு தென் ஆப்பிரிக்கா தீவிரமாக தயாராகிவந்த நிலையில், அதற்கு முன்பாக திடீரென ஓய்வு அறிவித்தார்.
2018இல் டிவில்லியர்ஸின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அதேபோலவே ஐபிஎல்லிலும் திடீரென ஓய்வு அறிவித்து அதிர்ச்சியளித்தார்.