ஐபிஎல் 2021: சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது மகிழ்ச்சி - விராட் கோலி!
சரியான நேரத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி” என ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 153 ரன்கள் குவித்த 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பாக பாராத் 44 ரன்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
Trending
இந்நிலையில் இப்போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் விராட் கோலி, “எங்களது அணி கடந்த இரண்டு போட்டிகளாக பலமாக திருப்பியுள்ளது நல்ல அறிகுறி. அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பதட்டமில்லாமல் பந்து வீச வேண்டும். நாங்கள் அந்த வகையில் சிறப்பாக பந்துவீசி உள்ளோம் என நினைக்கிறேன். இந்த போட்டியில் 175 ரன்கள் என்பது சவாலான இலக்காக இருந்திருக்கும். துவக்க விக்கெட்டுக்கு ராஜஸ்தான் சிறப்பாக விளையாடியதால் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை எதிர்பார்த்தோம். அதன்படி எங்களது பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்கள் தவறு செய்யும் வரை காத்திருந்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் எவின் லீவிஸ் விக்கெட் விழுந்ததுதான் இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோன்று முதல் போட்டியில் விளையாடிய கார்ட்டன் சிறப்பாக பந்துவீசினார். இந்த வெற்றி எங்கள் அணிக்கு ஒரு நல்ல நம்பிக்கை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி சரியான நேரத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now