ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இதில் இரு அணிக்கும் வாழ்வா சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில்விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணியானது கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றில் நுழைய முடியும். அதிலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ஆர்சிய அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் ஃபாஃப் டூ பிளெசிஸ், விராட் கோலி, ராஜத் பட்டிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லாம்ரோர் ஆகியோர் உள்ளனர். அதேசமயம் வில் ஜேக்ஸ் இப்போட்டியில் இடம்பெற மாட்டார் என்பதால் கிளென் மேக்ஸ்வெல் இடாம்பெற வாய்ப்புள்ளது. அணியின் பந்துவீச்சில் யாஷ் தயாள், கரண் சர்மா, ஸ்வப்நில் சிங், முகமது சிராஜ், லோக்கி ஃபெர்குசன் உள்ளிட்டோரும் உள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கர்ண் சர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த ஐபிஎல் சீசனில் 13 போட்டிகள் விளையாடி 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியானது இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே எளிதாக பிளே ஆஃப்சுற்றில் கால்பதித்து விடும். அதேவேளையில் தோல்வி அடைந்தாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் தோல்வி அடையாமல் பார்த்துக் கொண்டாலும் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிடலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் தூபே ஆகியோரையே அதிகம் நம்பியுள்ளது. இவர்களைத் தவிர்த்து அஜிங்கியா ரஹானே, ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே, சமர்ஜீத் சிங், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா மற்றும் மஹீஷ் தீக்சனா உள்ளிட்டோர் உள்ளது பலமாக பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, மகேந்திர சிங் தோனி, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா.
Win Big, Make Your Cricket Tales Now