
Royal Challengers Bengaluru vs Delhi Capitals, IPL 2024 Dream11 Team: இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 59 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் எந்தவொரு அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாளு அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலின் 5ஆம் இடத்திலும், ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 7 தோல்விகள் என 7ஆம் இடத்திலும் உள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடைவதுடன் பிளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
RCB vs DC: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- நேரம் - இரவு 7.30 மணி