
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலின் 5ஆம் இடத்திலும், ஆர்சிபி அணி 12 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 7 தோல்விகள் என 7ஆம் இடத்திலும் உள்ளன. இதனால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் அடைவதுடன் பிளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் விளையாடிய 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் அந்த அணி எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இதனால் அந்த அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.