Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 10, 2025 • 11:54 AM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 10, 2025 • 11:54 AM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்வதால்,  இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 

Trending

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ளது. அதிலும் கடந்த போட்டியில் அந்த அணி வலிமை வாய்ந்த மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, பில் சால்ட், படிதர், லிவிங்ஸ்டோன் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருடன் குர்னால் பாண்டியா, யாஷ் தயாளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் சுயாஷ் சர்மாவும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த அணி கடந்த முறை சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அதனை மாற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன் : பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, டிம் டேவிட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளுக்கு பிறகு இப்போட்டியில் விளையாடவுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் ஃபாஃப் டு பிளெஸ்சிஸ், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கேஎல்​​ராகுல், அபிஷேக் போரெல், டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடும் திறன் கொண்​ட​வர்​கள். பின் வரிசை​யில் அஷுதோஷ் சர்​மா, அக்​சர் படேல், விப்​ராஜ் நிகாம் ஆகியோரும் அணிக்கு கைகொடுக்கின்றனர். 

அதேசமயம் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா உள்ளிட்டோருடன் முகேஷ் குமாரும் அணியில் உள்ளது கூடுதல் உத்வேகமளிக்கும். ஏற்கெனவே அந்த அணி தற்போது வரை தோல்வியை தழுவாமல் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதன் காரணமாக, இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய வெற்றி கணக்கை தொடருமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச லெவன்: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கே.எல். ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேட்ச்), விபராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார். இம்பாக்ட் வீரர் - சமீர் ரிஸ்வி.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 31
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 19
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 11
  • முடிவில்லை - 01

Also Read: Funding To Save Test Cricket

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்- கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஜிதேஷ் சர்மா
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (கேப்டன்), ரஜத் படிதார், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், குர்னால் பாண்டியா, விபராஜ் நிகம்
  • பந்து வீச்சாளர்கள் - ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், யாஷ் தயாள்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement