ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
Trending
ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்வி, ஒரு வெற்றியை மட்டுமே சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் சீசனில் சொந்த மைதானத்தில் தோல்வியைச் சந்தித்த முதல் அணி எனும் மோசமான சாதனையையும் படைத்துள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வகையில் அந்த அணி விளையாடவுள்ளது.
அந்த அணியின் பேட்டிங்கில் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் அவருடன் இணைந்து விளையாடிய கேமரூன் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல், ராஜத் பட்டிதார் போன்ற வீரர்கள் தொடர்ந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது சிராஜ், அல்ஸாரி ஜோசப் போன்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
நிக்கோலஸ் பூரன் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் அந்த அணி தங்களது வெற்றி கணக்கை தொடரும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இருப்பினும் இன்றைய போட்டிக்கான அந்த அணியில் நட்சத்திர வீரர் கேப்டன் கேஎல் ராகுல் விளையாடுவாரா என்பது சந்தேகம் என்பதால் அந்த அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
இருப்பினும் அணியின் பேட்டிங்கில் டி காக், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற வீரர்கள் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அதேசமயம் அணியின் பந்துவீச்சில் மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், க்ருனால் பாண்டியா ஆகியோருடன் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் தனது முதல் போட்டியிலேயே வேகத்தால் எதிரணி பேட்டர்களை நிலைகுழைய வைத்துள்ளது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல்/ஆஷ்டன் டர்னர், தேவ்தத் படிகல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ், மணிமாறன் சித்தார்த்.
Win Big, Make Your Cricket Tales Now