ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
17ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போது சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் அதுவும் பேட்டிங்குக்கு உகந்த மைதானத்தில் ஆடுவதால் வெற்றிக் கணக்கை தொடங்க தீவிர முனைப்பு காட்டுவார்கள்.
அதேசமயம் மறுபக்கம் ஷிகர் தவான் தலைமையிலான் பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த உத்வேகத்துடன் அந்த அணி தங்களது வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் ஆவலில் உள்ளது. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடவுள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெ, கேமரூன் க்ரீன் ஆகியோர் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் பந்துவீச்சில் அந்த அணி சொதப்பிவருவது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், கரன் ஷர்மா, அல்ஸாரி ஜோசப்/லோக்கி ஃபர்குசன், மயங்க் டகர், முகமது சிராஜ்.
பஞ்சாப் கிங்ஸ்
ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்கள் முதல் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் பேர்ஸ்டோவ் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை இழந்தாலும் அவர்களது ஃபார்ம் சிறப்பாக உள்ளது. இதனால் அந்த அணியின் பிளேயிங் லெவனில் பெரிதளவில் மாற்றம் இருக்கது என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷிகர் தவான் (கே), ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சாஹர்.
Win Big, Make Your Cricket Tales Now