
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் தொடங்கிவுள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.
இத்தொடரில் நாளை நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை தக்கவைக்க முயற்சி செய்யும், அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
RCB vs SRH Match Details
- மோதும் அணிகள்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- இடம் - ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
- நேரம் - மே 23, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)