Advertisement

ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 15, 2024 • 02:16 PM

 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 15, 2024 • 02:16 PM

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்த வகையில் இத்தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம்.

Trending

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணிக்கு இந்தாண்டு சீசன் மிக மோசமானதாக மாறி வருகிறது. ஏனெனில் அந்த அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்துள்ளதுடன், புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அணியின் பேட்டிங்கில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோரைத் தவிற மற்ற எந்த வீரரும் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணமாக அமைகிறது. 

அதுமட்டுமின்றி அணியின் நட்சத்திர வீரர்களாக இருக்கும் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், முகமது சிராஜ் போன்ற வீரர்கள் இந்த சீசனில் சரிவர செயல்படாதது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இனிவரும் போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

ஆர்சிபி உத்தேச லெவன்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கே), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பான தாக இருந்துவரும் நிலையில், தோல்வியடைந்த இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றிக்கு அருகே சென்று தோற்றது என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் போன்றோருடன் தற்போது நிதீஷ் குமார் ரெட்டியும் அதிரடியாக விளையாடி வருவது அணிக்கு சாதமாக அமைந்துள்ளது. அதேசமயம் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், நடராஜன், பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனாத்கட், ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அந்த அணியின் பிளேயிங் லெவனில் பெரிதளவு மாற்றம் ஏதும் இருக்காது. 

எஸ்ஆர்எச் உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், டி நடராஜன்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement