Advertisement

WPL 2024: யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பீரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 03, 2024 • 10:26 PM

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி பலபப்ரீட்சை நடத்துகிறது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு எதிர்ச்சி கொடுத்துள்ளது. அதேசமயம் மறுபக்கம் யுபி வாரியர்ஸ் அணியும் இரண்டு வெற்றி, இரு தோல்வி என 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. இதனால் நாளை எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 03, 2024 • 10:26 PM

போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் -  இரவு 7.30 மணி 

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 02
  • யுபி வாரியர்ஸ் - 01

பிட்ச் ரிப்போர்ட்

இத்தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானத்தில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க முடியும். மேலும்  இங்கு நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளிலுமே இறுதிப்பந்து வரை சென்றுள்ளதால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி டிவைன், சப்பினேனி மேகனா, எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பாட்டீல், சிம்ரன் பகதூர், ஆஷா சோபனா, ரேணுகா சிங்

யுபி வாரியார்ஸ்: அலிசா ஹீலி (கே), கிரண் நவ்கிரே, சாமரி அத்தபத்து, கிரேஸ் ஹாரிஸ், ஸ்வேதா செஹ்ராவத், தீப்தி ஷர்மா, பூனம் கெம்னார், சைமா தாகூர், சோஃபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - அலிசா ஹீலி, ரிச்சா கோஷ்
  • பேட்டர்கள் - கிரண் நவ்கிரே, ஸ்மிருதி மந்தனா, சப்பினேனி மேகனா
  • ஆல்ரவுண்டர்கள் - எலிஸ் பெர்ரி, தீப்தி சர்மா, கிரேஸ் ஹாரிஸ், சாமரி அதபத்து
  • பந்துவீச்சாளர்கள் - ரேணுகா தாக்கூர் சிங், ராஜேஸ்வரி கயக்வாட்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement