Advertisement

அவர்கள் இருந்திருந்தால் ஆட்டம் 18 ஓவர்களிலேயே முடிந்திருக்கும் - எம் எஸ் தோனி!

ஃபாஃப் மற்றும் மேக்ஸ்வெல் நின்று விளையாடி இருந்தால் அவர்கள் 18ஆவது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இருப்பார்கள் என்று சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். 

Advertisement
RCB would have won by 18th over if Faf and Maxwell continued: MS Dhoni!
RCB would have won by 18th over if Faf and Maxwell continued: MS Dhoni! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 18, 2023 • 10:47 AM

ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இன்று இரு அணிகளுக்கு இடையே பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. கான்வே மற்றும் சிவம் துபே இருவரும் அரைசதம் அடித்தார்கள்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 18, 2023 • 10:47 AM

மிகப்பெரிய சாதனை இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறும் தூரத்திற்கு கொண்டு வந்தார்கள். ஆனால் இறுதியில் எட்டு ரன்கள் குறைவாக எடுத்ததால் தோல்வியை சந்திக்க வேண்டியதாக அமைந்துவிட்டது.

Trending

போட்டியின் முடிவுக்கு பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “நீங்கள் பெங்களூருக்கு வந்தால் நல்ல விக்கெட்தான் இருக்கும். அதேபோல் ஐபிஎல் தொடரில் பனிப்பொழிவும் அதிகம். எனவே நீங்கள் நன்றாக தொடங்க விரும்புகிறீர்கள். ஆனால் ஆரம்பத்தில் விளையாடுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் பொழுது உங்கள் மனநிலையை மாற்ற வேண்டும். இதைக் கடந்து சென்று, அதற்குப் பிறகு வேகமாக ரண்களுக்கு போக வேண்டும்.
நாங்கள் இந்த திட்டத்தை எளிமையாக வைத்து, பேட்டிங் இரண்டாவது பகுதியில் ரண்களுக்கு விரைவாக போக முயற்சி செய்தோம்.

அவர் கிளீன் ஹிட்டர். அவருக்கு வேகப்பந்து வீச்சில் சில பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் சுழற் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடக்கூடியவர். நாங்கள் அவருக்கென சில திட்டங்களை வைத்திருந்தோம். ஆனால் அவர் தொடருக்கு முன்பான முகாமுக்கு வந்த போது காயம் அடைந்திருந்தார். எனவே எங்களால் அவருடன் வேலை செய்ய முடியவில்லை. ஆனால் அவர் எங்களுக்கு தேவையானதை வழங்கக் கூடியவர் என்று நாங்கள் உணர்கிறோம். இதில் நம்மை விட அவருக்குத்தான் நம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். 

நம்மால் ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் வழி காட்ட முடியும். பவுண்டரி லைனை தாண்டி பீல்டில் நுழைந்து விட்டால் எல்லாம் அவரவர் பொறுப்புதான். ஃபாஃப் மற்றும் மேக்ஸ்வெல் நின்று விளையாடி இருந்தால் அவர்கள் 18ஆவது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இருப்பார்கள். நான் விக்கட்டுக்கு பின்னாலிருந்து மதிப்பீடு செய்கிறேன். முடிவை பற்றி கவலைப்படாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் எப்போதும் ஈடுபட்டு உள்ளேன். 

இறுதிக்கட்ட ஓவர் இளம் பந்துவீச்சாளர்களுக்கு கடினமான ஒன்று. குறிப்பாக ஆண்டின் பனி சூழ்ந்த இந்த நேரத்தில் கடினமான ஒன்று. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் கடினமாக உழைக்கிறார்கள். பிராவோ இதில் நிபுணர்களில் ஒருவர். அவருக்கு கீழ் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை பெறுவார்கள். இது ஒரு குழு விளையாட்டு. பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் என அவர்களை வழிநடத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement