
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகிற மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வருடம் பழைய முறைப்படி உள்ளூர் மைதானத்திலும் வெளியூர் மைதானத்திலும் தலா ஒரு போட்டிகள் நடைபெறுவதால் சுவாரசியத்திற்கு சற்றும் குறைவே இருக்காது.
முதல் போட்டி வருகிற 31ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் சாம்பியன் பட்டம் வென்ற அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு முதல் போட்டி வருகிற மார்ச் 5ஆம் தேதி பெங்களூருவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தொடங்குகிறது. முதல் போட்டிக்கு நிறைய நாட்கள் இருந்தாலும் அணியில் முன்னணி வீரர்கள் சிலர் காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். முன்னதாக இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் சர்வதேச போட்டியின்போது காயம்காரணமாக முழு ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரரும் கொண்டுவரப்பட்டது.