இது போன்ற வெற்றி எங்களுக்கு தேவைப்பட்டது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆர் சி பி கேப்டன் டுபிளசிஸ், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 60ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின.
ராஜஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 171/5 ரன்கள் எடுத்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டு பிளெஸ்ஸி 55 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
Trending
இந்நிலையில், இந்த வெற்றி குறித்து பேசிய டூ பிளெசிஸ், “நிச்சயமாக இது எங்களுக்கு சிறந்த ஆட்டமாக அமைந்தது. இது போன்ற வெற்றி எங்களுக்கு தேவைப்பட்டது. ஏனென்றால் எங்கள் ரன் ரெட் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அது அதிகமாக இருக்கும். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு கொஞ்சம் கடினமாகவே தான் இருந்தது.
நான் 160 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோர் ஆக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இறுதியில் எங்கள் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி கூடுதலாக ரன்களை சேர்த்தார்கள். கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் இறுதி கட்டத்தில் பெரிய ரன்களை அடிக்க தவறி விட்டோம். தற்போது இந்த ஆட்டம் எங்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.
இந்த வெற்றியை அனைவரும் கொண்டாடுகிறோம். ஏனென்றால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதுக்கு இந்த வெற்றி ஒரு நல்ல மருந்தாக அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் எங்கள் அணி வீரர்களுக்கு புதிய உற்சாகம் கிடைத்திருக்கிறது. எங்கள் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now