
'Recovered' Gill Ready To Play In Rescheduled IPL 2021 (Image Source: Google)
இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில். இவர் இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகி, இந்தியா திரும்பினார். இதையடுத்து அவர் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று தற்போது குணமடைந்துள்ளார்.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரக்கத்தில் நடைபெறம் எஞ்சியிள்ள ஐபிஎல் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக அவர் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் பயிற்சி பெற்று வருவதாகும், கூடிய விரைவில் ஆவர் அமீரகம் புறப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.