-mdl.jpg)
Release Irfan Pathan trends on Twitter and everyone has the same response (Image Source: Google)
கபில்தேவ்க்கு பிறகு இந்திய அணியின் ஆல்ரவுண்டராக விளங்கியவர் இர்ஃபான் பதான். தற்போது காஷ்மீர் அணிக்கு மெண்டராக இருக்கும் அவர், சமீபத்தில் டிவிட்டரில மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்தியாவில் நடைபெறும் சில அரசியல் சம்பவங்களை கண்டித்தும் அவ்வப்போது ட்விட் போட்டு வந்தார். சமீபத்தில் கூட இர்பான் பதான் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சிக்கும் வகையில் ட்விட் போட, அதற்கு சக கிரிக்கெட் வீரர் அமித் மிஷ்ரா பதில் போட்டு, அது வைரலாக மாறியது.
இந்த நிலையில், ட்விட்டரில் இர்பான் பதானை விடுதலை செய்யுங்கள் என்று ஹேஸ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இதனால் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கைது செய்யப்பட்டதாக ரசிகர்கள் புரிந்து கொண்ட அதிர்ச்சி அடைந்தனர். மேலும் டிவிட்டரின் ஆல்கோதரமும், அது விளையாட்டு என்ற தலைப்பில் என்ற ஹாஸ்டாக் டிரெண்ட் ஆனது.