
ஐபிஎல் 15வது சீசனில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது. இந்த நிலையில், மும்பைக்கு சென்றுள்ள பெங்களூரு அணி வீரர்கள், அங்கு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். திருமணம் காரணமாக மேக்ஸ்வெல் இன்னும் ஐபிஎல் தொடருக்கு வரவில்லை.
இதனால் மாற்று திட்டத்துடன் பெங்களூரு அணி முதல் சில போட்டியில் கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் டு பிளெஸிஸ் புதிய கேப்டனாக களமிறங்குகிறார். டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்று விட்டார். கேஎஸ் பரத், படிக்கல் , சாஹல் ஆகியோர் வேறு அணிக்கு சென்றுவிட, பெங்களூரு அணி புதிய அணியை கட்டமைத்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அனுபவம் இல்லாத அணியை வைத்து தான் ஆர்சிபி இம்முறை ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக உள்ளார் முன்னாள் கேப்டன் விராட் கோலி. குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு நேற்று தான் அணியின் பயிற்சி முகாம்க்கு கோலி திரும்பினார்.