
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டுப் பிரபலங்களில் மூன்றாவது நபராக விராட் கோலி உள்ளார். முதல் இரண்டு இடங்களில் கால்பந்தாட்ட வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். இந்த தகவலை ஹாப்பர் ஹெச்.க்யூ எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புகைப்படம் மற்றும் காணொளி ஷேர் செய்ய பயன்பட்டு வருகிறது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம். இது மெட்டா நிறுவனத்தின் வசம் உள்ளது. இதில் பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் பயனர்களாக உள்ளனர். இவர்களில் அதிக ஃபாலோயர்களை பெற்றவராக போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. சுமார் 59,68,48,846 பேர் அவரை இந்த தளத்தில் பின்தொடர்கின்றனர்.
அர்ஜென்டினாவை சேர்ந்த லியொனல் மெஸ்ஸியை 47,92,68,484 பேர் இன்ஸ்டாவில் பின்தொடர்ந்து வருகின்றனர். கோலியை, 25,52,69,526 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். பிரபலங்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தாங்கள் பகிரும் சில பதிவுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவது உண்டு. அதன் மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும்.