ஸ்டோக்ஸை கண்டால் தோனி தான் நினைவுக்கு வருகிறார் - ரிக்கி பாண்டிங்!
தோனி டி20 கேம்களில் கடைசி வரை இருந்து பல ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார். அதைப்போலவே பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் செய்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப்புகழ் பெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷாஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது.இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளும் மிகப் பரபரப்பானதாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி இறுதி நேரத்தில் வென்று அசத்தியது.
தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி மிகவும் பலமான முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் பக்கம் இருந்த ஆட்டத்தை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் தனி ஒரு வீரராக 155 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் பக்கம் கொண்டு வந்தார். ஆனால் அவர் ஆட்டம் இழக்க எல்லாம் மொத்தமாக மாறியது.
Trending
இதற்கு முன்பு இதே போல 2019 ஆம் ஆண்டு கடைசி விக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு மிக அபாரமாக விளையாடி சதம் அடித்து ஒரு போட்டியை வென்று கொடுத்து தொடரை சமனாகவும் உதவினார். அந்த ஆட்டத்தை இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஞாபகப்படுத்துவதாக அமைந்தது.
இதுகுறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “நான் உட்பட எல்லோரும் மீண்டும் ஒருமுறை பென் ஸ்டோக்ஸ் பழைய முறையில் இந்த ஆட்டத்தை வெல்வார் என்று நினைத்தோம். ஏனென்றால் அவர் ஏற்கனவே என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இது அவர்கள் துரத்துவதற்கு சற்று அதிகமான இலக்காக இருந்தது.
முதலில் நினைவுக்கு வந்தது இவர் தோனி போல இருக்கிறார் என்பதுதான். தோனி டி20 கேம்களில் கடைசி வரை இருந்து பல ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார். அதைப்போலவே பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் செய்கிறார். வரலாற்றில் இப்படி அதிகமானோர் இருந்தது கிடையாது. இந்த வேலையை செய்யும் சிலர் இறுதிவரை இருந்து இதை செய்கிறார்கள். மேலும் அவர்கள் கேப்டனாகவும் இருக்கிறார்கள்.
பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் சராசரியை மட்டுமே வைத்து பார்த்தால் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்று தெரியாது. அவர் இப்போது விளையாடியதை போல, ஏற்கனவே அணிக்கு செய்துள்ளதைப் எடுத்துப் பார்க்கும் பொழுதுதான் அவர் எவ்வளவு சிறந்தவர் என்பது வெளியே தெரிய வரும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now