WTC Final: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 11ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
மேலும் இப்போட்டிக்காக இரு நாட்டு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க வீரராக மார்னஸ் லபுஷாக்னேவை களமிறக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இப்போதுதான் எனக்கு தோன்றியது. அவரை தொடக்க வீரராக களமிறக்கும் பட்சத்தில் மூன்றாம் வரிசையில் கேமரூன் க்ரீனையும், நான்காம் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தையும் பயன்படுத்த முடிவும். மேற்கொண்டு டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஆகியோர் அவர்களைத் தொடர்ந்து களமிறங்குவார்கள்.
அணியின் பந்துவிச்சு குறித்து பேசினால் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லையன் ஆகியோருக்கு அணியில் நிச்சயம் இடமிருக்கும். ஆனால் இங்கிருக்கும் கேள்வி யாதெனில் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டா அல்லது ஸ்காட் போலாண்டா என்பது பற்றி தான். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளனர்.
அதனால் இவர்களில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஹேசில்வுட் முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அணியின் லெவனில் நேரடியாக இடம்பிடிப்பார் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் ரிக்கி பாண்டிங் தனது லெவனில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், ஜோஷ் இங்கில்ஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய லெவன்: உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணிகள்
தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன்.
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மேட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
Win Big, Make Your Cricket Tales Now