விராட் கோலியால் எங்களுக்கு எதிராக ரன்கள் குவிக்க முடியாது - ரிக்கி பாண்டிங்!
விராட் கோலி பழைய ஃபார்மிர்க்கு திரும்பினாலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரன் அடிப்பது கடினம் தான் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.
இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலி அடுத்தடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் இருக்கும் முக்கியத்துவத்தை பிசிசிஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்தது
Trending
குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சொதப்பாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விண்டீஸ் அணிக்கு எதிரான விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கிரிக்கெட் தொடரில் எழுபதாவது சதத்தை அடித்து ஆயிரம் நாளை தொட்டுவிட்டதால் விராட் கோலி எதிர்வரும் ஆசிய கோப்பையில் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.
ஆனால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்தார். களம் இறங்கிய முதல் சில பந்துகளில் விராட் கோலி தன்னுடைய விக்கெட்டை இழந்திருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் அணி வீரர் கேச்சை தவறவிட்டதால் விராட் கோலி 30+ ரன்கள் வரை அடிக்க முடிந்தது.
என்னதான் விராட் கோலி 30 ரன்கள் அடித்தாலும் விராட் கோலியின் தீவிர ரசிகர்களுக்கும், இந்திய அணிக்கும் இது மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. இந்த நிலையில் ஹாங்காங் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விராட் கோலி நிதானத்துடன் விளையாடி அரை சதம் அடித்துள்ளார். இந்த அரை சதத்தை விராட் கோலியை விட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக கொண்டாடி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருந்தாலும் அனுபவம் குறைவான ஹாங்காங் எனக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவாரா…மாட்டாரா..? என்று விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் விராட் கோலியின் கம் பேக் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்து வந்தாலும்,ஒரு சிலர் இன்னும் விராட் கோலியின் ஆட்டத்தை அங்கீகரிக்காமல் தான் பேசுகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், விராட் கோலியின் கம்பெக் சிறப்பாக உள்ளது, அவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன், ஆனால் அவருடைய ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “உலக கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன், நிச்சயம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருப்பார், அவர் என்னதான் சிறப்பான வீரராக இருந்தாலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் போது அவரால் ரன்கள் அடிக்க முடியாது, இது ஒருபுறம் இருந்தாலும் விராட் கோலி பழைய பாமிற்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சிகரமான விஷயமாகும். அவர் ஆசிய கோப்பை சிறப்பாக விளையாடுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now