
தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலாவதாக பவுலிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் ஐபிஎல் போட்டியில் சொதப்பினாலும், நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து அணியின் ரன் ரேட்டுக்கு உதவி புரிந்தார்.
அதேபோல், ஹர்திக் பாண்ட்யா 12 பந்துகளில் 31 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 16 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தனர். ருதுராஜ் 23 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களும் எடுத்திருந்தனர். தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் இறங்கியதால் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.