
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற அணிகள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.
அடுத்த மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
இதற்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா, ரஹானே, ஷுப்மன் கில் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் சூர்யகுமார் யாதவ் கூடுதல் வீரராக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.