WTC 2023: கோப்பையை அறிமுகம் செய்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை (டெஸ்ட் மேஸ்) ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற அணிகள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இந்திய அணி அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.
அடுத்த மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
Trending
அதுமட்டுமின்றி 2013க்கு பின்னர் எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்த அணி அந்த நீண்ட கால சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள கோப்பையை (டெஸ்ட் மேஸ்) ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.
Ricky Ponting unveils Test mace for WTC final between IND & AUS!
— CRICKETNMORE (@cricketnmore) May 19, 2023
Who Will Take It Home Next Month?#WTCFinal #INDvAUS #AUSvIND #Australia #WTC #TeamIndia pic.twitter.com/wCgPDbfPi3
அந்த கோப்பையுடன் ரிக்கி பாண்டிங் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now