
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ்க்கு தொடக்கமே பின்னடைவாக அமைந்துள்ளது. மும்பை அணியில் ஏற்கனவே ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.
நடப்பு சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்ளும் போது மும்பை அணி ஜேசன் பெகுரண்டஃப், ஜோப்ரா ஆர்ச்சர், கேமரூன் கீரின் , டிம் டேவிட் ஆகிய 4 வீரர்களை வைத்து களமிறங்கியது. இதில் பெஹன்ண்டஃப் 3 ஓவரில் 37 ரன்களை விட்டு கொடுத்தார்.
ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் 2 ஓவரில் 30 ரன்களை விட்டு கொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 33 ரன்களை விட்டு கொடுத்தார். இதனால் மும்பை அணி தங்களது பிளானை மாற்றி கொள்ள முடிவு எடுத்துள்ளது. ரிச்சர்ட்சனுக்கு பதில் ஏற்கனவே மும்பை அணிக்காக விளையாடிய ரெய்லி மெர்டித்தை மும்பை அணி ஒப்பதம் செய்தது.