
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர். இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக பலமுறை தனது அதிரடியான பேட்டிங்காள் வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார். அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக இருமுறை சதமடித்த ஒரே வீரரும் இவர் தான்.
மேலும் தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வருவதால் அந்த அணியின் மிக முக்கிய வீரராகவும் மில்லர் பார்க்கப்படுகிறார். அதன்படி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணியின் தூணாகவும் மில்லர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது மகள் புற்றுநோயால் மரணமடைந்ததாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் மில்லர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள டேவிட் மில்லர் இந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.