
Rishabh Pant Can Only Continue To Get Better, Says Shane Watson (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி மஹாராஷ்டிராவில் தொடங்குகிறது. இதில் வரும் 27ஆம் தேதி டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மேலும் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னா அஸ்திரேலிய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், “இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட பலமான அணிகளில் டெல்லியும் ஒன்று. அதனால்தான் டெல்லி கேப்பிட்டல்ஸின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.