Advertisement

தோனியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரிஷப் பந்த்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாளை கேக் வெட்டி ரிஷப் பந்த் கொண்டாடிய சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 07, 2023 • 13:48 PM
Rishabh Pant celebrates MS Dhoni's birthday by cutting the cake on his behalf!
Rishabh Pant celebrates MS Dhoni's birthday by cutting the cake on his behalf! (Image Source: Google)
Advertisement

இந்தியாவுக்காக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் கேப்டன் எம்எஸ் தோனி. அதேபோல் இளம் வீரர்கள் பலரையும் இந்திய அணிக்கு கொண்டு வந்து வாய்ப்பு கொடுத்து உருவாக்கியவர். விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் வரை உருவாக்கியுள்ளார்.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைந்து ஓய்வுபெற்று சாஹா, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாக மறைமுக காரணமாகவும் அமைந்தவர். தோனிக்கு பின்பே, தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உருவாக தொடங்கினார்கள். அந்த வகையில் தோனிக்கு பின் அவரது இடத்தை சிறப்பாக செய்து வருபவர் ரிஷப் பந்த்.

Trending


தோனியின் தீவிர ரசிகரான ரிஷப் பந்த் ஒவ்வொரு முறையும் தோனி குறித்து பெருமிதமாக பேசி வந்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரின் போது டெல்லி அணியின் கேப்டனாக களமிறங்கி தோனிக்கு நேரடியாக சவால் அளித்துள்ளார். இருப்பினும் தோனிக்கான மரியாதை மட்டும் என்றும் குறைந்ததில்லை. இந்த நிலையில் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு மற்ற வீரர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் ரிஷப் பந்த் ஒருபடி மேல் சென்று, தோனியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் நீண்ட நாட்களாக என்சிஏ-வில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். உலகக்கோப்பைத் தொடருக்குள் ரிஷப் பந்த் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement