
Rishabh Pant Contributes Money For Oxygen Cylinders And Beds (Image Source: Google)
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் கொரோனா நிதியுதவி வழங்குவது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரிஷப் பந்த் சமூக நல அமைப்பு ஒன்றுக்கு நிதியுதவி செய்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிஷப் பந்த், "விளையாட்டில் நான் கற்றுக்கொண்ட முக்கிய விஷயம், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான். அந்த வகையில் கரோனாவை எதிர்த்து ஓய்வின்றி உழைத்து வரும் முன் களப் பணியாளர்களுக்கு எனது சல்யூட். அதே போல கரோனாவில் இருந்து இந்தியா மீள நமது கூட்டு முயற்சி தான் தேவை.