
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விக்கெட் கீப்பராக யார் ஆடுவது என்பதுதான் இப்போதுவரை குழப்பமாக உள்ளது. ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்துவந்தார்.
ஆனால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பேட்டிங் ஆடி தன்னை ஒரு ஃபினிஷராக அடையாளம் காட்டிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியிலும் இடம்பிடித்தார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக மீண்டும் ஆட கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார்.
ஆனால் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே அவர் களமிறக்கப்பட்டார். அதற்கு முன் அவரை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை. கடைசி 5 ஓவர்களில் அல்லது 10-15 பந்துகள் ஆடுவதற்காக ஒரு வீரரை எடுக்கக்கூடாது. ஆட்டத்தை இக்கட்டான நிலையிலிருந்து கடைசிவரை எடுத்துச்சென்று முடித்து கொடுப்பவர் தான் ஃபினிஷர் தானே, கடைசி சில பந்துகளில் பெரிய ஷாட் ஆடி ஃபினிஷிங் டச் கொடுப்பவர் ஃபினிஷர் அல்ல என்ற விமர்சனம் எழுந்தது.