Advertisement

ஆசிய கோப்பை 2022: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சபா கரீம்!

முன்னாள் கிரிக்கெட் வீரரான சபா கரீம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

Advertisement
Rishabh Pant over Dinesh Karthik in Asia Cup? Saba Karim
Rishabh Pant over Dinesh Karthik in Asia Cup? Saba Karim (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 26, 2022 • 10:19 PM

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரு அணிகளும் 28ஆம் தேதி நடைபெறும் தங்களது முதல் போட்டியிலேயே ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 26, 2022 • 10:19 PM

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை வெளிப்படுத்துவதோடு, இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

Trending

அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான சபா கரீம், அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்துள்ளார்.

சபா கரீம் தனது அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவையும், கேஎல் ராகுலையும் தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை தேர்வு செய்துள்ள சபா கரீம், தினேஷ் கார்த்திக்கிற்கு தனது ஆடும் லெவனில் இடம் கொடுக்கவில்லை.

ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்துள்ள சபா கரீம், சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹலையும் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

சபா கரீம் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement