
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஆசிய கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 28ஆம் தேதி துபாயில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, ஆசிய கோப்பையில் பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது.
அதற்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பையில் ஆடவில்லை. இது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு.