WTC Final: இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கிய இந்தியா!
இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி, நேற்றையை தினம் இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.
இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் நியூசிலாந்து அணி கடந்த மாதமே இங்கிலாந்துக்கு சென்றடைந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி, நேற்றையை தினம் இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கியது. இப்போட்டியில் ரிஷப் பந்த் அரைசதம் அடித்து தனது திறனை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இந்திய அணியில் தனக்கான வாய்ப்பையும் அவர் உறுதிபடுத்தியுள்ளார்.
A good Day 1 at office for #TeamIndia at the intra-squad match simulation ahead of #WTC21 Final pic.twitter.com/TFb06126fr
— BCCI (@BCCI) June 12, 2021
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இப்பயிற்சியின் மூலம் டியூக் பந்துகளில் விளையாட தங்களைப் பழக்கப்படுத்தி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து மைதானங்களில் டியூக் பந்துகளை எதிர்கொள்வது பேடஸ்மேன்களுக்கு எப்போது சவாலான ஒன்று.
Win Big, Make Your Cricket Tales Now