IND vs ENG: ரிஷப் பந்திற்கு கரோனா!
இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமயிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 23 வீரர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடிய நிலையில், இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது.
சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கும் இடையில் சுமார் 40 நாட்கள் இடைவெளி உள்ளது.
Trending
இந்நிலையில் இன்று காலை இந்திய அணியில் உள்ள இரண்டு வீரர்கள் கரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு மீண்டும் மேற்கொள்ள பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது
ஆனால் மற்றொரு வீரருக்கு தொற்று உறுதியானதால் அவர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர் ரிஷப் பந்த் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து டர்ஹாமில் நடைபெறவுள்ள பயிற்சி போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில் ‘‘ஒரு வீரருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆனால், கடந்த 8 நாட்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அணிகளின் மற்ற வீரர்களுடன் அவர் இணைந்து தங்கவில்லை. ஆகவே, மற்ற வீரர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த வீரரின் பெயரை வெளியிட முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now