Advertisement

‘இந்த வீரர் தான் இந்திய அணியின் எதிர்காலம்’ - இளம் வீரருக்கு ஆதரவு தரும் மேத்யூ ஹைடன்!

ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் எதிர்காலம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். 

Advertisement
Rishabh Pant would be picked in every side if I was the selector: Matthew Hayden
Rishabh Pant would be picked in every side if I was the selector: Matthew Hayden (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 21, 2022 • 07:59 PM

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விக்கெட் கீப்பராக யார் ஆடுவது என்பதுதான் இப்போதுவரை குழப்பமாக உள்ளது. ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்துவந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 21, 2022 • 07:59 PM

ஆனால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பேட்டிங்  ஆடி தன்னை ஒரு ஃபினிஷராக அடையாளம் காட்டிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியிலும் இடம்பிடித்தார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக மீண்டும் ஆட கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னை ஒரு ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார்.

Trending

ஆனால் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே அவர் களமிறக்கப்பட்டார். அதற்கு  முன் அவரை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை. கடைசி 5 ஓவர்களில் அல்லது 10-15 பந்துகள் ஆடுவதற்காக ஒரு வீரரை எடுக்கக்கூடாது. ஆட்டத்தை இக்கட்டான நிலையிலிருந்து கடைசிவரை எடுத்துச்சென்று முடித்து கொடுப்பவர் தான் ஃபினிஷர் தானே, கடைசி சில பந்துகளில் பெரிய ஷாட் ஆடி ஃபினிஷிங் டச் கொடுப்பவர் ஃபினிஷர் அல்ல என்ற விமர்சனம் எழுந்தது.

ரிஷப் பந்துக்கு ஆதரவாக சில முன்னாள் வீரர்களும், தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக சிலரும் குரல் கொடுத்தனர். டி20 உலக கோப்பையை கருத்தில்கொண்டு இருவரில் ஒருவரை இந்திய அணி ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால் இருவரையும் மாற்றி மாற்றி இறக்கிவிட்டு, ஒரு தெளிவில்லாத சூழலை உருவாக்கி, அவர்கள் இருவருக்கும் குழப்பதை  ஏற்படுத்தி அணி நிர்வாகமும் குழப்பமடைகிறது.

ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக்கை ஓரங்கட்டிவிட்டு ரிஷப் பந்தை ஆடவைத்தது. இடையில் சில போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக், கடைசி 5 இன்னிங்ஸ்களில் சொதப்பியுள்ளார். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் தான் விக்கெட் கீப்பராக விளையாடினார். ஆனால் அவர் 5 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடன், “நான் தேர்வாளராக இருந்தால் எந்தமாதிரியான அணியின் ஆடும் லெவனிலும் கண்டிப்பாக ரிஷப் பந்தை எடுப்பேன். அவர்தான் எதிர்காலம். அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கவேண்டும். அவர் ஸ்கோர் செய்தாலும் செய்யாவிட்டாலும், ஃபார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி.. அவரை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement