
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அங்கு நடைபெற உள்ளது.
ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது ஒருநாள் அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் டெஸ்ட் தொடரானது தொடங்கிய்பின்னரும் இதுவரை ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் ரோஹித் சர்மாவின் உடற்தகுதிக்காக காத்திருக்கும் பிசிசிஐ-யானது நாளை அல்லது நாளை மறுதினம் இந்த தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் ரோஹித் சர்மா மீண்டும் திரும்புவார் என்று கூறப்படுகிறது. அதோடு சேர்த்து அஸ்வின் மற்றும் சாஹல் ஆகியோரும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே கூறப்பட்டது.