
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், மைதானங்களில் நடந்து கொண்ட விதம் பலமுறை விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக தரையில்தான் பந்து பட்டதால் கேட்ச் அவுட் கொடுக்காத நடுவரை என்னமோ அநீதி இழைத்து விட்டதாக கலாய்த்தார். அதற்காக அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹைடனை மறைமுகமாக டுவிட்டரில் ஏளனமாக கலாய்த்தார்.
அதுபோன்ற சேட்டைகளை செய்த இவர் பேட்டிங்கில் படு மோசமாக செயல்பட்டு வருகிறார். சொல்லப்போனால் 4 வருடங்களாக அந்த அணிக்காக விளையாடி வரும் இவர் இதுவரை 2 அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளதால் எப்போதும் வாயில் பேசாமல் செயலில் வெற்றி பெற்று காட்டுமாறு அவர் மீது ரசிகர்கள் கோபத்துடன் காணப்படுகின்றனர்.
அத்துடன் இந்த வருடம் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 2 வருடங்கள் கழித்து ராஜஸ்தானுக்காக அரைசதம் அடித்த அவர் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் உட்பட 18 ரன்களை விளாசினார். அதனால் கடுப்பான ஹர்ஷல் படேல் அந்த இன்னிங்ஸ் முடிந்த இடைவெளியில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் அந்தப் போட்டியில் பெங்களூரு தோல்வியடைந்த பின் இரு அணி வீரர்களும் கைகொடுக்கும் போது ஹர்ஷல் படேலிடம் ரியன் பராக் கை கொடுத்தார்.