டி20 தரவரிசை: பாபரை பின்னுக்கு தள்ளினார் ரிஸ்வான்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

டி20 போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
அவர் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக சக அணி வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல் சமீபத்தில் முதலிடத்தில் இருந்த பாபர் ஆசாம், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியளின் மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம்மும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 4ஆவது இடத்தில் உள்ளார் .
அதே போல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் தப்ரைஸ் ஷம்ஸியும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் அதில் ரஷித்தும் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now