யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - ஹர்திக் பாண்டியா பதிலடி
இந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமரிசித்ததையடுத்து, இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் உலக கிரிக்கெட்டில் வெள்ளை பந்து விளையாட்டில் இந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமரிசித்திருந்தார். இந்த நிலையில் வாகன் விமர்சனத்திற்கு ஹார்திக் பாண்டியா பதிலடி கொடுத்துள்ளார்.
Trending
இது குறித்து பேசிய அவர், “நீங்கள் நன்றாகச் செய்லபடவில்லை என்றால் , மக்கள் தங்கள் கருத்தைக் வெளிப்படுத்துவார்கள் , அதை நாங்கள் மதிக்கிறோம். மக்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். சர்வதேச அளவில் இருப்பதால், யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
இது ஒரு விளையாட்டு, நீங்கள் தொடர்ந்து சிறப்பாக இருக்க முயற்சி செய்கிறீர்கள், இறுதியில் அது நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்கும். நாம் வேலை செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன, முன்னோக்கிச் செல்லும்போது நாங்கள் அதைச் சரிசெய்து வேலை செய்வோம்.
டி20 உலகக் கோப்பையில் ஏமாற்றம் உள்ளது, சிறப்பாகச் செயல்படவும், நாம் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் பார்க்க வேண்டும். முக்கிய வீரர்கள் இல்லை, ஆனால் நம்மிடம் உள்ள திறமை.. ஏற்கனவே இங்கு இருக்கும் வீரர்கள், ஒன்றரை வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடி வருவதால், சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை வெளிப்படுத்த அவர்களுக்கு போதுமான நேரம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செய்யப்படவுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி நாளை மறுநாள் வெலிங்டனில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now