
Robin Uthappa opens up about friendship with MS Dhoni (Image Source: Twitter)
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் அணி அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இருப்பினும் ரசிகர்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக ராபின் உத்தப்பா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினுடனான யூடியூப் பேட்டியின் போது ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, மகேந்திரசிங் தோனியை 'மஹி பாய்' என்று அழைப்பது கடினமாக இருந்ததாக ராபின் உத்தப்பா நினைவு கூர்ந்துள்ளார் .
ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனல் பேட்டிக்காக அவரிடம் பேசிய ராபின் உத்தப்பா, ''தோனியை இப்போது 'மஹி பாய்' என்று அழைப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இதுவரையில் அவரை மஹி, எம்எஸ் என்றுதான் அழைத்திருக்கிறேன்.