ஒல்லி ராபின்சனை எச்சரித்த போட்டி நடுவர்?
ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட ஒல்லி ராபின்சன்னிற்கு போட்டி நடுவர் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் கேப்டன் கம்மின்ஸால் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. 2 நாட்களாகியும் ஆஷஸ் தொடர் வெற்றியில் இருந்து ஆஸ்திரேலிய அணி ரசிகர்கள் இன்னும் வெளிவரவில்லை. வெற்றியை தீவிரமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே இங்கிலாந்து அணியின் ராபின்சன்னை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 3ஆம் நாள் ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராபின்சன், ஆஸ்திரேலிய அணியின் கடைசி 3 வீரர்களுக்கும் பேட்டிங் வராது. இதுகுறித்து வீரர்களின் ஆலோசனை கூட்டணித்திலும் பேசி இருக்கிறோம். போலண்ட், லயன் மற்றும் ஹேசல்வுட் ஆகிய மூவரும் நம்பர் 11 வீரர்களே என்று ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டல் செய்தார்.
Trending
ஆனால் ஆஷஸ் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய போலாந்த் 20 ரன்களும், லயன் 16* ரன்களும் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். குறிப்பாக லையன் அடித்த ஒரு ஸ்ட்ரைட் ட்ரைவ் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராபின்சன் கருத்துக்கு ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், ராபின்சன் பேசியதை கவனிக்கவில்லை. ஆனால் எங்கள் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் பேட்டிங் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக லயன், போலண்ட் இருவரும் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொடரில் சரியான திட்டத்துடனே களமிறங்கி இருக்கிறோம். இவ்வளவு ஏன், 2019ஆம் ஆண்டு ஜாக் லீச் கூட சிறந்த நம்பர் 11 பேட்ஸ்மேனாக இருந்தார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்ததை இங்கிலாந்து வீரர் ஒல்லி ராபின்சன் ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு போட்டி நடுவர் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அவருக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் அவர் இதே தவறை செய்யும் பட்சத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now