
Rohit Sharma Gives A Major Update On Hardik Pandya's Bowling Fitness Ahead Of T20 World Cup (Image Source: Google)
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தினால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது,
இந்நிலையில் இப்போட்டியின் போது ஹார்திக் பாண்டியா பந்துவீசுவது குறித்து பேசிய ரோஹித் சர்மா "இந்திய அணிக்கு 6-வது பந்துவீச்சாளர் தேவை. ஹார்திக் பாண்டியா நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். ஆனால், அவர் பந்துவீச சற்று நேரம் எடுக்கும். அவர் இன்னும் பந்துவீச தொடங்கவில்லை. ஆனால், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு தயாராகிவிட வேண்டும்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021