
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையும் பெற்றது.
ரோஹித் சர்மா கேப்டன்சி செய்த முதல் டெஸ்டிலேயே இந்திய அணி மூன்றே நாட்களில் வெற்றியை தனதாக்கியுள்ளது. முன்னதாக ரோஹித் டெஸ்ட் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார், அவரின் உடற்தகுதி டெஸ்ட் கேப்டன்சிக்கு சரிவராது என சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் கவாஸ்கரே ரோஹித்தின் கேப்டன்சியை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், “ரோஹித் சர்மா பவுலிங்கை மாற்றியது, ஃபீல்ட் செட்டிங் அமைத்தது மிகச்சிறப்பாக அமைந்தது. சரியான இடத்தில் சொல்லி வைத்து விக்கெட் எடுத்தார். அதாவது ஃபீல்டர்கள் நின்றிருந்த இடத்திற்கே சரியாக பந்து சென்றது, ஃபீல்டர்கள் ஒரு அடி கூட நகர தேவை ஏற்படவில்லை. அப்படி ஒரு துல்லியம் இருந்தது.