
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இன்னும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அந்த அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் பேட்டிங்கில் அணிக்கு உத்வேகம் அளிக்கத் தவறிவிட்டார். ஆறு ஆட்டங்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி வெறும் 19 ரன்கள் தான். இந்தியாவின் அனைத்து வடிவ கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து ரோஹித் சர்மாவின் செயல்திறன் வரைபடம் குறைந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருதுகிறார்.
மைக்கேல் வாகன் அளித்த பேட்டியில், “ரோஹித் சர்மா ஒரு பிரச்சினையில் உள்ளார். அவர் இந்திய அணியின் கேப்டன் பணியைப் பெற்றபின் அவர் உண்மையில் சிறப்பாக விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பை அவர் பயன்படுத்தத் தவறியது எனக்கு கவலையாக இருக்கிறது.